பிரதான பக்கம் > ஹலால் என்றால் என்ன?

ஹலால் என்றால் என்ன?

ஹலால் பற்றிய தவறான கருத்துக்கள்

ஹலால் பற்றிய தவறான கருத்துக்களும் அவற்றின்  தெளிவூபடுத்துதலும்

  •  ஹலால் முஸ்லிம்களுக்கு மாத்திரமே
    'ஹலால்' என்று கருதப்படும் அனைத்தும்  முஸ்லிம்களால் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்றும் அவர்களால் மட்டுமே உட்கொள்ள முடியூம் என்ற கருத்து உள்ளது, குறிப்பாக உணவு மற்றும் பானம் தொடர்பாக இவ்வாறு நம்பப்படுகின்றது.  இது முற்றிலும் தவறான கருத்தாகும். ஹலால் என்பது முஸ்லிம்கள் நுகர அனுமதிக்கப்பட்டவை என்றாலும், அவை முஸ்லிம் நுகர்வுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட விசேட  தயாரிப்புகள் அல்ல. பல நாடுகளில், முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சமூகங்கள் ஹலால் நுகர்வு குறித்த புரிந்துணர்வூடன் செயற்படுகின்றனர்.
  • ஹலால் என்பது கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வையாகும்
  • தெய்வங்கள் என்று நம்பப்படுபவைக்கு சில விலங்குகள் மற்றும் உணவை வழங்குவது சில மதங்கள் வழக்கமாகும். ஆனால், இஸ்லாத்தில் அவ்வாறான போதனைகள் கிடையாது.  அனைத்து உணவுகளும் மனித நுகர்வுக்கானவையே. பலிபீடத்தில் கடவுளுக்கு உணவை வழங்க வேண்டும் என்ற போதனை இஸ்லாத்தில் இல்லை. ஹலால் என்பது முஸ்லிம்களுக்கும் ஹலால் உணவை உட்கொள்ள விரும்புவோருக்கும் அங்கீகரிக்கப்பட்ட உணவாகும்.
  • ஹலால் உணவூ மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும்
    உணவூ வகைகளின் ஹலால் தன்மையை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்படும் கடுமையான அவதானிப்புகளையூம் தாண்டி ஆரோக்கியமற்ற உணவு மற்றும் பானங்கள் சந்தைக்குள் நுழைவது சாத்தியமில்லை. ஹலால் உணவு மலட்டுத்தன்மையையோ அல்லது வேறு எந்தத் தீங்கையோ ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்கு பதிலாக ஹலால் உணவு மனித நுகர்வுக்கு மிகவும் பொருத்தமானது என்றே ஆய்வூகள் உறுதி படுத்திவருகின்றன.
  • ஹலால் உணவூகள் சூனியத்திற்கு பயன் படுத்தப்படுகின்றன
    மந்திரம்,  சூனியம் போன்ற அனைத்து தீய செயல்களையும் இஸ்லாம் பாவங்களாக கண்டித்து அவற்றை முற்றிலுமாக தடை செய்கிறது. அந்நிலையில் தூய உணவு மற்றும் பானமான ஹலாலுக்கும் சூனியத்திற்கும் தொடர்பு  இருப்பதாக முன்வைக்கப்படும் வாதம் அர்த்தமற்றது
  • இனங்களை ஹலால் பிரிக்கின்றது
    மத அடிப்படை உணவூ வழக்கங்கள் அரசியல் அமைப்பின் மூலமே வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்தின் ஒரு அம்சமாகும். ஹலாலின் நோக்கம் இதுவே அன்றி இனங்களிடையே பிரிவினையை தோற்றுவிப்பதல்ல.
  • ஹலால் சான்றிதழ் முறைமை காரணமாக நிறுவனங்களின் உற்பத்தி இரசகசியங்கள் வெளியாகின்றன
    எங்கள் நிறுவனம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் புகழ்பெற்ற தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் பணியாற்றும் ஒரு நிறுவனமாகும். மேலும் இது ஒரு நீண்ட பயணத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாறாக நிறுவனங்களின் உற்பத்தி தொடர்பான இரகசியங்களை வெளியிடுவது போன்ற முறைகேடான மற்றும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட ஒரு போதும் முற்படாது. ஹலால் சான்றளிக்கப்பட்ட நிறுவனங்களின் உற்பத்தி முறைகளின் இரகசியத் தன்மையை பேணுவது நமது நிறுவனத்தின் முக்கிய கோட்பாடாகும்.