HAC பற்றி
அனைத்து உறுப்பினர்களின் நிறுவன அமைப்பு விவரங்கள்
HAC என்பது 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். சர்வதேச தர நிலைகள் மற்றும் சமகால நிறுவன நிர்வாகத்தால் இயக்கப்படும் தொழில்முறை முகாமைத்துவ செயல்முறையின் அடிப்படையில் சிறந்த சேவைகளை வழங்குவதில் HAC கவனம் செலுத்துகிறது.
HAC அமைப்பின் சாராம்சம்
பதினொரு நிறுவன உறுப்பினர்களால் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்டது.
- தற்போது, சுமார் 40 முழுநேர ஊழியர்கள் அடங்கிய குழு அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
- இலங்கையில் 230 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் HAC ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளைத் ஏற்றுமதி செய்கின்றன.
- சர்வதேச ஹலால் அதிகாரிகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களுடன் HAC இன் தொடர்பு காரணமாக, எங்கள் சான்றிதழ் உலகின் பல நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- நாட்டின் பல முன்னணி தொழில்நாமங்கள் (பிராண்டுகள்) HAC யிடமிருந்து ஹலால் சான்றிதழைப் பெறுகின்றன.
ஸ்தாபித்த உறுப்பினர்கள்
சிறப்புமிக்க பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பதினொரு உறுப்பினர்களால் HAC தொடங்கப்பட்டது. இபின்னணிகளில் கல்வி, வணிக மற்றும் தொழில்சார், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் போன்றவை அடங்கும். நிறுவிய உறுப்பினர்கள் இலங்கை சமுதாயத்திலும் சர்வதேச சமூகத்திலும் மிகவும் மதிக்கப்படும் நன்கு அறியப்பட்ட மற்றும் திறமையான நபர்கள் ஆவர்.
நிறுவனர் உறுப்பினர்கள்
Prof. M. H. Rezvi Sheriff
Prof. of Medicine; Director of the Postgraduate Institute of Medicine; Founder Chairman, Western Infirmary Hospital, ColomboDr. Aboobacker Haroon
Bachelor of Medicine; Director of Amana Bank PLC and Amana Takaful PLC, Chairman for Lucky Group of CompaniesMr. M. Mohammed Zuhair
Lawyer – President’s Counsel, Former Member of Parliament of Sri Lanka (1990-2000)Mr. A. Fazal Issadeen
Bachelor of Business Administration (B.B.A.); Managing Director, Datamation Systems (Private) LtdMr. M. Muslim Salahudeen
Chief Executive Officer and Founder of Mushan Holdings and Mushan InternationalMr. M. H. Mohamed Fazal
Managing Director and Chief Executive Officer, American Premium Water Systems (Pvt) LtdMr. R. M. Fouzul Hameed
Chairman and Managing Director Hameedia GroupMr. M. Rameez Nalir
Justice of Peace, Proprietor DRESSPOINT; President – Dehiwela Mt’ Lavinia Masjid FederationM. Ali Fatharally
Management Accountant and Investment Banker; Director – Global commodity Solutions (Pvt) Limited; DirectorM. H. Mohamed Hisham
Management Professional, Entrepreneur and Social Activist. Co-founder Tellida (Pvt) Ltd, Sri LankaMr. M. A. Ahmed Irfan
Chief Digital Officer (CDO) at EFL; Founder – Innovation Quotient (Pvt) Limited; Lecturer Birmingham City University - MBA
நிர்வாகக் குழு
சபையின் நடவடிக்கைகளை நேரடியாகவூம், தனிப்பட்ட அணுகுமுறையுடனும் மேற்கொள்வதற்கும் அதை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கும் நிர்வாக வழிகாட்டுதல்களை வழங்கும் கல்வி மற்றும் தொழில் ரீதியாக தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பல திறமையான நிபுணர்களை HAC இன் நிர்வாகக் குழு கொண்டுள்ளது.
Mr. Ali Fatharally (Chairman)
Mr. T. K. Azoor
Mr. M. U. M. Hussain
Mr. Aakif Wahab (CEO - HAC)
Mr. Annes Junaid
Mr. Rizvi Zaheed
இணக்கப்பாட்டுக் குழு
சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளை நுகர்வுக்கு அனுமதிப்பது தொடர்பான பொருத்தமான மத முடிவுகளின் அடிப்படையில் HAC சான்றிதழ் செயல்முறைகளுக்கான ஹலால் தரங்களை அமைத்து ஒப்புதல் அளிப்பது இணக்கப்பாட்டுக் குழுவின் கடமையாகும். HAC ஹலால் தரங்களை மதிப்பாய்வு செய்ய, கண்காணிக்க மற்றும் தொடர்ந்து மேம்படுத்த விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பின்னணியைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் அடிக்கடி சந்தித்து கலந்தாலோசிக்கும் அறிஞர்களால் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இணக்கக் குழுவின் உறுப்பினர்கள்:
Ash Sheikh Mufthi K. H. M. A. Mafaz
Chairman, Compliance CommitteeAsh Sheikh M. Akram Nooramith
Ash Sheikh M. Abdullah
Ash Sheikh Insaf Mashood
Ash Sheikh Mufthi Mohamed Mustafa Raza Mohamed Zaffer
பக்கசார்பின்மையை பேணும் குழு
இக் குழுவின் கடமை HAC சான்றிதழ் செயல்பாட்டின் செயல்பாடுகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வதாகும். அத்துடன் பக்கச்சார்மின்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுக்க பொருத்தமான மற்றும் முறையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதும் இக்குழுவின் பொறுப்பாகும்.
HAC அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் பக்கச்சார்பற்ற தன்மையைக் கடைப்பிடிப்பதை பிரதிபலிக்கும்.
பக்கச்சார்பற்ற தன்மையைப் பாதுகாப்பதற்கான குழு உறுப்பினர்கள்:
-
Mr. Fawzan Ahamed
Chairman, CSI Mr. Risvi A. Majeed
-
Ash Sheikh Zaid Nooramith
Mr. Aakif Wahab
(CEO - HAC)Mr. Shaheem Sadikeen
முறைப்பாடுகள் மற்றும் மேல்முறையீடுக் குழு
முறையீடுகள் மற்றும் மேல்முறையீட்டு நிர்வாகக் கொள்கையை கடைப்பிடிப்பது, இக் குழுவின் பொறுப்பாகும். இது முறையீடுகள் மற்றும் அவற்றைக் கையாளுதல், தீர்ப்பது மற்றும் ஆவணப்படுத்துவதில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் எப்போதும் பக்கச்சார்பற்ற தன்மையை பேணுவது ஆகியவற்றை உட்படுத்தும்.
முறைப்பாடுகள் மற்றும் முறையீடுகள் கீழ்காணும் விடயங்களுக்கான வாய்ப்பு மற்றும் சந்தர்ப்பம் என்றே HAC நோக்கும்:
- வாடிக்கையாளர் சேவைகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிவதற்கான ஒரு வழிமுறையாக. மற்றும் தொடர்புடைய உள்ளக செயல் முறையாக
- வாடிக்கையாளர் திருப்தியின் அளவை அளவிடுவதற்கான ஒரு வழிமுறையாக
- தொடர்ச்சியான செயல்முறை மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர் திருப்தி நிலைகளை பாதிக்கும் வாய்ப்பாக