ஹலால் சான்றிதழ்
தணிக்கை முறை மற்றும் திறன்
ISO 19011 (கணக்காய்வு நிர்வாக அமைப்புகளுக்கான வழிகாட்டுதல்கள்) பரிந்துரைகளுக்கு இணங்கவும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி HAS அதன் கணக்காய்வு மற்றும் சான்றிதழ் பணிகளை மேற்கொள்ள வேண்டும் வேண்டும்.
- HAC ஆல் நடத்தப்பட்ட தணிக்கை வகைகள் பின்வருமாறு:
- சான்றிதழ் தணிக்கை
- அவானிப்பு தணிக்கை
- மீள் சான்றிதழ் தணிக்கை
- விசேட தணிக்கை
பெரும்பாலான பிந்தைய சான்றிதழ் அல்லது கண்காணிப்பு தணிக்கைகள் அறிவிக்கப்படாத வருகை அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும்.
- தணிக்கை கோட்பாடுகள்
HAC கடைபிடிக்கும் தணிக்கை கோட்பாடுகள் பின்வருமாறு:- நம்பகத்தன்மை- தொழிலான்மை அடிப்படை
- நியாயமான வழங்கல் - சரியாகவூம் நேர்மையாகவூம் அறிக்கை வழங்கும் பொறுப்பு
- முறையான தொழில் பாதுகாப்பு - தணிக்கையின் போது விவேகம் மற்றும் சுறுசுறுப்பு
- இரகசியம் பேணல் - தகவல்களின் இரகசியம் பாதுகாத்தல்
- சுயாதீனம் -தணிக்கையின் போது பக்கசார்பற்ற தன்மை மற்றும் தணிக்கை முடிவூகளில் புறநிலையத்தன்மைக்கான அடிப்படை
- சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை - முறையான தணிக்கை செயல்முறையுடன் நம்பகமான மற்றும் மீள் உருவாக்கக்கூடிய முடிவுகளுக்கு வழிவகுக்கும் ஒரு தர்க்க ரீதியான முறைமை
பிரிவு 4 இன் கீழ் விவரிக்கப்பட்டுள்ளபடி, HAC தணிக்கையாளர்களின் தணிக்கை நடவடிக்கைகளில் மேற்கண்ட கொள்கைகள் பிரதிபலிக்க வேண்டும்.
- நம்பகத்தன்மை- தொழிலான்மை அடிப்படை
- திறன்கள் (அறிவு மற்றும் ஆற்றல்கள்)
தணிக்கையாளர்கள் மற்றும் சான்றிதழ் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள ஏனையவர்கள் தங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் செயல்பாடுகளையும் பொறுப்புகளையும் மேற்கொள்ளத் தேவையான திறன்களை (அறிவு மற்றும் ஆற்றல்கள்) கொண்டிருக்க வேண்டும். திறன்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
- தணிக்கைக் கோட்பாடுகள், நடைமுறைகள் மற்றும் நுட்பங்கள் - பல்வேறு தணிக்கைகளுக்கு பொருத்தமான தணிக்கை முறைமைகளைப் பயன்படுத்துவதற்கான தணிக்கையாளரின் திறனானது, தணிக்கை சீரானது மற்றும் முறையானது என்பதை உறுதி செய்கிறது. ஒரு தணிக்கையாளர் பின் வருவனவற்றைச் செய்யலாம்:
- தணிக்கைக் கோட்பாடுகள், நடைமுறைகள் மற்றும் நுட்பங்களை பொருந்துமை உள்ளதாக ஆக்குதல்
- செயற்பாடுகளை பயனுள்ளதாக திட்டமிடல் மற்றும் ஏற்பாடு செய்தல்
- இணக்கம் தெரிவிக்கப்பட்ட கால எல்லைக்குள் தணிக்கையை நடாத்துதல்
- முன்னுரிமைகள் மீது கவனம் செலுத்துதல்,
- பயனுள்ள நேர்காணல்கள், செவி மடித்தல், அவதானித்தல் மற்றும் ஆவணங்களை மதிப்பாய்வு செய்தல் மூலம் தகவல்களைச் சேகரித்தல்.
- அறிக்கைகள் மற்றும் தரவூகளை வைத்திருத்தல்
- தணிக்கைக்கு மாதிரி முறைகளைப் பயன்படுத்துவதன் சரியான தன்மை மற்றும் விளைவுகளைப் புரிந்து கொள்ளுதல்,
- சேகரிக்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை சரிபார்த்தல்
- தணிக்கை கண்டுபிடிப்புகள் மற்றும் முடிவுகளுக்கு துணை புறிவதற்கு தணிக்கை சான்றுகளின் போதுமான தன்மை மற்றும் பொருந்துமையை உறுதி செய்தல்;
- தணிக்கை கண்டுபிடிப்புகள் மற்றும் முடிவுககளின் நம்பகத்தன்மையில் தாக்கம் செலுத்தும் காரணிகளை மதிப்பீடு செய்தல்
- தணிக்கை நடவடிக்கைகளை சமர்பிப்பதற்கு ஆவணங்களை பயன்படுத்துதல்
- தணிக்கை அறிக்கைகளை தயாரித்தல்,
- தகவல்களின் இரகசியத்தன்மையையும் பாதுகாப்பையும் பராமரித்தல் மற்றும்,
- பயன்மிகு விதத்தில் வாய் மொழியாக மற்றும் எழுத்துப்பூர்வமாக தொடர்பாடல் மேற்கொள்ளுதல் (நேரடியாக அல்லது மொழிபெயர்ப்பாளர் ஊடாக)
- தணிக்கை தொடர்பான ஆபத்துகளின் வகைகளைப் புரிந்து கொள்ளல்
- தணிக்கையின் விடய பரம்பலை புரிந்து கொள்வதற்கும் தணிக்கை அளவுகோல்களைச் செயல்படுத்துவதற்கும் தணிக்கையாளருக்கு உதவும் வகையில் ஹலால் தரநிலைகள் தயாரிப்பு / சேவை சான்றிதழ் மற்றும் நிர்வாக அமைப்பு
- நிறுவன சூழ்நிலைகள்: நிறுவனத்தின் செயல்பாட்டு சூழலைப் புரிந்து கொள்வதற்கு தொழில்நுட்ப தணிக்கையாளருக்கு முடிகின்றமை.
- தொடர்புடைய சட்டங்கள் நியதிகள் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஏனைய சட்ட ரீதியான மற்றும் ஹலால் அடிப்படை சட்டங்கள்
- HAC நிறுவனத்தின் சான்றிதழ் செயல்முறை மற்றும் நடைமுறைகள்
- தணிக்கைக் கோட்பாடுகள், நடைமுறைகள் மற்றும் நுட்பங்கள் - பல்வேறு தணிக்கைகளுக்கு பொருத்தமான தணிக்கை முறைமைகளைப் பயன்படுத்துவதற்கான தணிக்கையாளரின் திறனானது, தணிக்கை சீரானது மற்றும் முறையானது என்பதை உறுதி செய்கிறது. ஒரு தணிக்கையாளர் பின் வருவனவற்றைச் செய்யலாம்:
- HAC தணிக்கையாளர்களின் தனிப்பட்ட நடத்தை
தணிக்கையாளர்கள் உட்பட சான்றிதழ் பயிற்சியாளர்களுக்கு முக்கியமான தனிப்பட்ட நடத்தைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:
- தார்மீகமாக இருத்தல் நியாயமாக நடந்து கொள்ளல், உண்மையான, நேர்மையான மற்றும் இரகசியம் பேணுபவராக இருத்தல்
- திறந்த மனதுடன் இருத்தல், அதாவது மாற்றுக் கருத்துக்கள் அல்லது முன்னோக்குளுக்கு செவிமடிப்பவராக இருத்தல்
- விவேகமாகவூம் இராஜதந்திரத்துடனும் வாடிக்கையாளர்களுடன் நடந்து கொள்ளல்;
- பிறருடன் ஒத்துழைப்புடனும் பயன் மிகு விதத்திலும் நடந்து கொள்ளல்
- பௌதிக சூழல் மற்றும் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக அறிந்திருத்தல்
- உள்ளுணர்வாக அறிந்த மற்றும் சூழ்நிலைகளை இயல்பாகவே புரிந்து கொள்ளல்
- பல்வேறுபட்ட சூழல்களுடன் இசைவாகுதல்
- விடாமுயற்சியுடன், இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்துங்கள்
- தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையில் சரியான நேரத்தில் காத்திரமான முடிவூகளை எடுத்தல்
- தன்னம்பிக்கையூடனும் சுயாதீனமாகவூம் செயல்படுதல்
- பணியிடத்து ஒழுக்கங்களை பேணியவண்ணமும் மணசாட்சிக்கு மாற்றமில்லாமலும் ஒரு வியாபாரியின் தன்மையை காட்சிப்படுத்தல்
- தார்மீகத்துடனான தைரியம், அதாவது இந்த நடவடிக்கைகள் எந்நேரமும் பிரபலமாக இருப்பதில்லை என்றபடியாலும் சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் அல்லது மோதல்களுக்கு வழிவகுக்கும் என்றாலும், பொறுப்புடன் மற்றும் நெறிமுறையாக செயல்பட தயாராக இருத்தல்
- ஏற்பாட்டுடன் இருத்தல் அதாவது பயனுள்ள நேர நிர்வாகம் முன்னுரிமை, திட்டமிடல் மற்றும் செயல்திறனை காட்சி படுத்துதல்
- தார்மீகமாக இருத்தல் நியாயமாக நடந்து கொள்ளல், உண்மையான, நேர்மையான மற்றும் இரகசியம் பேணுபவராக இருத்தல்