பிரதான பக்கம் > ஹலால் சான்றிதழ்
ஹலால் சான்றிதழ்
முறையீடுகள் மற்றும் கோரிக்கைகள்
முறைமை
HAC ஹலால் சான்றிதழ் வைத்திருப்பவர்கள், அவர்கள் பெற்ற சான்றிதழ் தொடர்பாக நிறுவனத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய HAC க்கு எழுத்து மூல கோரிக்கை ஒன்றை முன்வைக்க வேண்டும்.
அனைத்து நோக்கங்களுக்காகவும் குறிக்கோள்களுக்காகவூம் HAC வழங்கிய சேவை மட்டங்கள் அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட HAC ஊழியர்களின் நடத்தை அல்லது முடிவுகள் தொடர்பான சர்ச்சை ஆகியவற்றின் மீதான அதிருப்தியின் எழுத்துமூல வெளிப்பாடாக முறைபாடுகளை HAC விளக்குகின்றது .
HAC முறைபாடுகள் மற்றும் கோரிக்கைகள் முறைமை
- எந்தவொரு HAC வாடிக்கையாளரும் எழுத்துமூலமாக தனது முறைப்பாட்டை அல்லது கோரிக்கையை தலைமை நிர்வாக அதிகாரியிடம் முன் வைக்கலாம்.
- முறைப்பாட்டை அல்லது கோரிக்கையை பெறும் எந்தவொரு HAC ஊழியரும் அதை அலுவலக தினத்திற்குள் CAMC யின் தலைமை அதிகாரிக்கு எழுத்துமூலமாக அறியத்தருதல் வேண்டும்.
- சம்பந்தப்பட்ட முறைப்பாடு அல்லது கொரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை CAMC யின் தலைமை அதிகாரி எழுத்து அதை பெற்ற தினத்தில் இருந்து 12 அலுவலக நாட்களுக்கு குறையாத கால எல்லைக்குள் எழுத்து மூலமாக கிடைத்ததை அறியத்தருதல் வேண்டும்.
- ஒவ்வொரு வாடிக்கையாளர் புகார் அல்லது முறையீடும் முறையீடுகள் மற்றும் மேல்முறையீட்டு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு ஒரு தொடர் எண் தரப்பட வேண்டும்.
- குறிப்பிட்ட முறைப்பாடு கிடைத்த விடயத்தை ஐந்து அலுவலக நாட்களுக்குள் CAMC இன் தலைவர் எழுத்து மூலமாக அறிவிக்க வேண்டும். குறிப்பிட்ட முறைப்பாடு அல்லது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் ஒரு தீர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்தல் வேண்டும்.
- இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்புடைய முறைப்பாடு அல்லது அல்லது கோரிக்கையை ஏற்க முடியுமா என்பதை CAMC தலைவர் தீர்மானிக்க வேண்டும்
- CAMC இன் தலைவர் புகாரை ஏற்க முடியாது என முடிவு செய்ய இயலும். ஆனால் அதற்கான காரணத்தை முறையீட்டாளருக்கு விளக்க வேண்டும். இருப்பினும், முறையீட்டாளர் தங்கள் வாதத்திற்கு மேலதிக ஆதாரங்களை வழங்க வாய்ப்பு வழங்கப்படும். CAMC தலைவர் அல்லது தலைமை நிர்வாக அதிகாரியிடம் முறையீட்டாளர் சென்று முறையீட்டை ரத்து செய்யக் கோரலாம்.
- ஏற்பை இரத்து செய்ததன் பின் தேவையான நடவடிக்கைகளுக்காக முறைப்பாடு CAMC இற்கு சமர்பிக்கப்படும்.;
- முறையீட்டை மதிப்பீடு செய்வதற்கு அல்லது முறையீட்டை முன் வைப்பதற்கு மற்றும் உரிய நபர்களை நியமித்து விசாரணையைத் தொடங்குவதற்கு CAMC நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையீட்டை தயார் செய்வதற்கு தொடர்புடைய உண்மையான, நம்பகமான மற்றும் சாதகமான ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பெறப்பட்ட உள்ளீட்டை மதிப்பிடுவதற்கு CAMC நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மேற்கண்ட உள்ளீடுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், CAMC ஒரு முடிவுக்கு வந்து அந்த முடிவை இறுதியானதாக அறிவிக்க வேண்டும்.
- இறுதி முடிவை ஏக மனதாக எடுக்க முடியும் அல்லது உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் எடுக்க முடியும்.
- தலைவர் மற்றும் CAMC உறுப்பினரின் கூட்டு கையொப்பத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் முறைப்பாட்டாளருக்கு எழுத்து மூலமாக முடிவை அனுப்ப வேண்டும்.
- தேவைக்கேற்ப திருத்தங்களைச் CAMC மேற்கொள்ளலாம், திருத்த நடவடிக்கைகளை பரிந்துரைக்கலாம் அல்லது அல்லது கட்டளை இடலாம். பரிந்துரைக்கப்பட்ட திருத்த நடவடிக்கை QR ஆல் மேற்கொள்ளப்படும்.
- முறையீட்டின் சுருக்கம் மேற்கொள்ளப்பட்ட செயல் நிர்வாக மீளாய்வு உள்ளீட்டின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
- நுகர்வோரின் முறைப்பாடு நியாயமானதாகத் தோன்றினால், தொடர்புடைய ஒப்பந்த விதிகளின் கீழ் சான்றிதழ்தாரர் சேதங்களுக்கு பொறுப்பாவார்.