பிரதான பக்கம் > ஹலால் என்றால் என்ன?

ஹலால் என்றால் என்ன?

ஹலால் ஏற்றுமதி

இஸ்லாமிய உலகப் பொருளாதாரத்தின் முன்னோடிகள் - முதலீடு மற்றும் ஏற்றுமதியை உறுதி படுத்தும் காரணிகள்

வேகமாக வளரச்சி அடைந்து வரும் முஸ்லிம் சனத்தொகை  

 2014 இல் 1.7 பில்லியனாக இருந்த உலகளாவிய முஸ்லீம் மக்கள் தொகை 2030 க்குள் 2.2 பில்லியனை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2.94% ஐ விட  அதிக வளர்ச்சி வீதமாகும் மற்றும் முஸ்லிமல்லாதவர்களின் வளர்ச்சி விகிதத்தை விட இரு மடங்காகும். உலகளாவிய முஸ்லீம் மக்களின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1.5%  ஆவதோடு  இவ்விகிதமானது  முஸ்லிமல்லாதவர்கள் விடயத்தில்  0.7% ஆகும்


அதிகரித்து வரும் மதப்  பற்று

 உலகளாவிய ரீதியில், முஸ்லீம் நுகர்வோர் ஹலால் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அதிகளவில் கோருகின்றனர். 38,000 முஸ்லிம்கள் மத்தியில் 2011 ஆண்டில்  பிவ் ஆராய்ச்சி மையம் (Pew Research Centre) நடாத்திய ஆய்வின் போது 76.3% முஸ்லிம்கள் மதத்தை  ‘மிக முக்கியமானது’ என்று கருதுவது புலனாகியது. மேலும் 96% சர்வதேச முஸ்லீம் சுற்றுலாப் பயணிகள் ‘ஹலால் உணவை மிகவும் முக்கியமானது’ எனக் கருதுகின்றனர் என 2016 COMCEC கணக்கெடுப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

நீல்சன் ஆய்வூ நிறுவனத்தின் கணிப்பீட்டின்படி, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் (MENA) 48% நுகர்வோருக்கும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 12% மற்றும் பிற பிராந்தியங்களில் 1 முதல் 4% சதவீத நுகர்வோருக்கு வரை ஹலால் உணவு முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உலகில் பல்வேறுபட்ட மத நம்பிக்கைகள் இருப்பதுடன் அவை ஒன்றிற்கு ஒன்று வேறுபட்டவையாகும். இந்த நிலையில் மத நம்பிக்கையின் அடிப்படையில் தங்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றமையை எவரும் மறுக்க முடியாது

 

அதிகரித்து வரும் நுகர்வூ தொடர்பான நெறிமுறை

 இஸ்லாமிய பொருளாதாரம் முஸ்லிம் அல்லாத நுகர்வோரின் பரந்த பேணுதல் அடிப்படையிலான தேவைகளையூம் பூர்த்தி செய்கிறது. தற்காலத்தில்  பேணுதல்கள் அதிக  முக்கியத்துவம் பெறுகின்றன, மேலும் 66% நுகர்வோர், பேணுதல் அடிப்படையிலான தயாரிப்புகளுக்கு அதிக விலை செலுத்த தயாராக உள்ளனர். எனவே, பரந்த அளவிலான பேணுதல் அடிப்படைய நுகர்வோருக்கு சேவை செய்வதற்காக ஹலால் ஆர்கானிக் பிராண்டுகளும் உருவாகி வருகின்றன.

 

இஸ்லாமிய பொருளாதாரம் பன்னாட்டு நிறுவனங்களின் கவனத்தை உலகளாவிய விதத்தில் ஈர்த்து வருகின்றன

 உலகளாவிய ஹலால் உணவுத் துறையில் நெஸ்லே, கார்கில்ஸ், BRF மற்றும் அபோட் போன்ற முக்கிய பன்னாட்டு நிறுவனங்களின் அதிகரித்து வரும் பங்கேற்பானது, இஸ்லாமிய பொருளாதாரத்தில் ஹலாலின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

 

OIC அல்லாத நாடுகள் தமது உணவூத் தேவைகளுக்கு இறக்குமதியைச் சார்ந்திருத்தல்

 OIC  நாடுகள் பொதுவாக தமது உணவூத் தேவைகளுக்கு இறக்குமதியைச் நம்பியூள்ளமை வெளிப்படை.

 2018 ஆம் ஆண்டில், OIC நாடுகள் 117.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள உணவு மற்றும் பானங்களை ஏற்றுமதி செய்தன, ஆனால் அதே ஆண்டில் அந்நாடுகளால் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் மதிப்பு 184.2 பில்லியன் டாலர் ஆவதோடு இது ஏற்றுமதியை விட  67 பில்லியன் அமெரிக்க டாலர் மேலதிகமாகும்.

 அதே போன்று OIC உறுப்பு நாடுகளிலிருந்து OIC  நாடுகளிலின் உணவு இறக்குமதி 34 பில்லியன் டாலராக இருந்தது, இது 2018 இல் மொத்த உணவு இறக்குமதியில் 18% மட்டுமே. பிராந்தியத்தில் OIC அல்லாத நாடுகளில் OIC நாடுகளின் இறக்குமதி சார்புபை  இது எடுத்துக்காட்டுகிறது.

 

நியதிகள்

 OIC நாடுகளிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் ஹலால் நம்பகத்தன்மையை அந்நாடுகளின் அரசாங்கங்கள் மிகத் தீவிரமாக வலியூறுத்தி வருகின்றன, எனவே இந்தோனேசியா, மலேசியா, சவுதி அரேபியா உட்பட்ட பல முஸ்லீம் நாடுகள் உள்ளிட்ட  OIC நுகர்வோர் சந்தைகளில் உள்ள பொருட்களுக்கு ஹலால் சான்றிதழின் தேவை அதிகரித்து வருகிறது.

 சவூதி அரேபியாவை தளமாகக் கொண்ட GCC சான்றுறுதி மையம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சர்வதேச சான்றுறுதி மையம் (EIAC) தலைமையிலான சர்வதேச சான்றிதழ்களின் அங்கீகாரம் தொடர்பான விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற.

Reference: State of the Global Islamic Economy Report 2019/20, Global Islamic Economy Key Drivers, Pg 11 & 12