பிரதான பக்கம் > ஹலால் சான்றிதழ்

ஹலால் சான்றிதழ்

ஹலால் நிர்வாக அமைப்பு (HMS)

ஹலால் நிர்வாக முறைமை

HMS எனப்படும் ஹலால் நிர்வாக முறையை HAC அமைப்பே அறிமுகப்படுத்ததியூள்ளது.  இது ISO  மற்றும் HACB போன்ற நன்கு அறியப்பட்ட சர்வதேச தரங்களுடன் இணங்கக்கூடிய கட்டமைப்புக்கள்  அடிப்படையிலான ஹலால் விதிகளின் தொகுப்பாகும்.

ஹலால் நிர்வாக முறைமையின் (HMS) அங்கங்கள் / கூறுகள்
  1. ஹலால் கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்கள்
    உயர் நிர்வாகம் எழுத்து வடிவ ஹலால் கொள்கைகளின் தொகுப்பை நிறுவி அவற்றை அனைத்து நிறுவன பங்குதாரர்களுக்கும் விநியோகித்துள்ளது.
  2. ஹலால் நிர்வாக முறைமையின் நோக்கத்தை வரையறுத்தல்
    தயாரிப்புகள் அல்லது தயாரிப்பு பிரிவுகள், வளாகங்கள் (விநியோகச் சங்கிலியுடன் இணைக்கப்பட்ட அனைத்து வளாகங்களும்), செயல்முறைகள் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கிய ஹலால் நிர்வாக அமைப்பின் நோக்கத்தை அமைப்பு வரையறுத்து ஆவணப்படுத்த வேண்டும்.
  3. ஹலால் சான்றுறுதிக் குழு
    ஹலால்  நிர்வாகக் அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல ஒழுங்கு பின்னணிகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஹலால் நிர்வாகக் குழுவை உயர் நிர்வாகம் நியமிக்க வேண்டும். ஹலால் நிர்வாக  குழுவின் கடமைகள், பொறுப்புகள் மற்றும் அதிகாரம் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.
  4.  உள்ளக மற்றும் வெளிப்புற சிக்கல்கள், அபாயங்கள் மற்றும் வாய்ப்புகள்
    உள்ளக மற்றும் வெளிப்புற ஹலால் தொடர்பான அனைத்து சிக்கல்களையும் அவற்றுடன் தொடர்புடைய அனைத்து சாதகமான வாய்ப்புகள் அல்லது அபாயங்களையும் இந்த அமைப்பு கண்டறிந்து ஆவணப்படுத்த வேண்டும்.
  5. ஆவணம் மற்றும் ஆவணப்பதிவூ நிர்வாகம்
    ஆவணம் மற்றும் அறிக்கை நிர்வாகத்திற்கான ஆவணப்படுத்தப்பட்ட நடைமுறையை இந்த அமைப்பு நிறுவி மேற்கொண்டு வரும்.
  6. திறன்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு
    ஹலால் நிர்வாக அமைப்பின் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து நபர்களும் பொருத்தமான கல்வி, பயிற்சி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஹலால் நிர்வாக அமைப்பின் தேவைகள் குறித்து அறிந்திருப்பதை நிறுவனம்உறுதி செய்ய வேண்டும்.
  7. முன்நிபந்தனை தொடர்பான திட்டங்கள்  (PRP’s)
    தயாரிப்பு, உற்பத்திகளை பதப்படுத்தல் மற்றும் சேவை சூழலில் உயிரியல், பௌதீக மற்றும் ரசாயன மற்றும் ஹராம் அசுத்தங்களைத் தடுப்பது, குறைத்தல் அல்லது நீக்குதல் ஆகியவற்றுக்கான தொடர்ச்சியான ஆவணப்படுத்தப்பட்ட திட்டங்களை இந்த அமைப்பு நிறுவி செயல்படுத்தி மேற்கொண்டு வர வேண்டும்.
  8. ஹலால் கட்டுப்பாடு புள்ளி (HCP)
    விநியோகத் தொடரில் ஹலால் கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய ஏதேனும் ஒன்று புலப்படும் பட்சத்தில்  ​​அந்த அச்சுறுத்தல் அல்லது அபாயத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  9. இணக்கமற்ற நிலைகளை சமாளித்தல்
    நியதிகளுடன் இசைவாகாத தொழிற்சாலைகள் மற்றும் மூலப்பொருட்களை பயன் படுத்தி தயாரிக்கப்படுபவை தொர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக எழுத்து மூல சட்டக் கோவை ஒன்று நிறுவனத்திற்கு இருத்தல் வேண்டும்.
  10. மூலங்களை கண்டறிதல்
    இறுதி தயாரிப்பு விநியோகத்திற்கு ஹலால் நிர்வாக அமைப்பால் கட்டுப்படுத்தக் கூடிய சப்ளையர்களிடமிருந்து வரும் பொருட்களுக்கான ஆதாரங்களைக் கண்டறியூம் ஒரு முறைமையை HMS அமைப்பு  நிறுவி செயல்படுத்த வேண்டும்.
  11. உள்ளக  கணக்காய்வூ
    ஹலால் நிர்வாக அமைப்பின் உள்ளக தனிக்கைக்கான எழுத்துப்பூர்வ திட்டம் ஒன்று நிறுவனத்தில் இருத்தல் வேண்டும். அது ஒரு கால அட்டவணைப்படி செயற்படுதல் வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது தேவைப்பட்டால் அதை விட அதிக தடவைகள் கணக்காய்வை  மேற்கொள்ளலாம்.   உள்ளக கணக்காய்வின் முடிவுகள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நேர அறிக்கையாக HAC க்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்
  12. நிர்வாக மீளாய்வூ
    வருடத்திற்கு ஒரு முறை அல்லது தேவைப்பட்டால் மேலும் சில தடவைகள் ஹலால் நிர்வாக முறையை செயல்படுத்துவதன் செயல்திறனை உயர்  மதிப்பாய்வு செய்ய வேண்டும். மதிப்பீட்டின் முடிவுகள் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு பொறுப்பான தரப்பினருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.