பிரதான பக்கம் > ஹலால் என்றால் என்ன?
ஹலால் என்றால் என்ன?
ஹலால் உணவுகளின் நன்மைகள்
உணவூ உற்பத்தியாளர்களுக்குள்ள நற்பயன்கள்
- உலகளாவிய ஹலால் உணவு மற்றும் பான சந்தையில் ஒரு பங்காளராக ஆகும் வாய்ப்பு கிடைக்கின்றது. 2024 ஆம் ஆண்டில் ஹலால் சந்தையின் பெருமதி 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் தற்போதைய ஆண்டு வளர்ச்சி விகிதம் 6.3%. ஆகும்
- உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முஸ்லீம் மக்கள் சனத்தொகைக்கு உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்யூம் சந்தர்ப்பம் கிடைத்தல். உலகின் முஸ்லீம்கள் சனத்தொகை 2030 க்குள் 2.2 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பல்வேறுபட்ட மக்கள் பிரிவினருக்கு சேவை வழங்கும் நிறுவனமென்ற நற்பெயர் கிடைத்தல்
- ஹலால் சான்றிதழ் நுகர்வோருக்கு தயாரிப்பாளர்களின் கூற்றுக்களின் உண்மை நிலைமையை அறிய உதவூகின்றது. இதன் மூலம் அதிக அளவு விற்பனையை சாத்தியமாகின்றது.
- Halal certification helps consumers verify product claims, which in turn, translates into sales.
நுகர்வோருக்குள்ள நற்பயன்கள்
- தாங்கள் விலை கொடுத்து வாங்கும் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் சிக்கலான கூறுகளில் இறந்த விலங்குகளின் சடலங்கள், அத்தகைய விலங்குகளிடமிருந்து பெறப்படும் தீங்கு விளைவிக்கும் கூறுகள் எதுவூம் கிடையாது என்ற உறுதியைப் பெறுதல்
- ‘பண்ணையிலிருந்து உணவூ மேஜை வரை’ என்ற கருத்தின்படி, நாம் உண்ணும் உணவில் உள்ள பொருட்கள் தொழில்நுட்பவியலாளர்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன. இத்தயாரிப்புகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் சேர்க்கைகள், பொதி செய்யப் பயன் படுத்தும் பொருட்கள், எண்ணெய்கள், ரசாயனங்கள் ஆகியவற்றின் ஹலால் நிலையை உறுதி செய்வதற்கு அவை அனைத்தும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன.