பிரதான பக்கம் > ஹலால் சான்றிதழ்

ஹலால் சான்றிதழ்

சான்றிதழ் கட்டணம்

ஹலால் தரங்களை தங்கள் உற்பத்தி செயல்முறைகள் மற்றும் விநியோக சங்கிலிகளில் இணைக்க முன்வந்த வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரமான சேவையை வழங்கும் பொருட்டு நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மிகவும் திறமையான நிபுணர்களை HAC பயன்படுத்துகிறது.  எனவே சேவையை வழங்குவதற்கு நியாயமான ஒரு  கட்டணத்தை வசூலிப்பது அவசியமாகின்றது மேலும் அதில் இருந்து கிடைக்கும் வருமானங்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய நல நோக்கங்களுக்காகவே ஈடுபடுத்தப்படும்.

HAC சான்றிதழ் கட்டணம் பின்வரும் காரணிகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது:


  • செயல்பாட்டுப் பிரிவூகள்: உற்பத்தி, உணவு வளாகங்கள், கோழி இறைச்சி, அங்கீகாரம்
  • தயாரிப்பு வகை: பேக்கரி, பால், தின்பண்டங்கள் போன்றவை.
  • பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் / முக்கியத்துவம்: இறைச்சி, சுவை, ஸ்டெபிலயிஸர் போன்றவை.
  •  ஹலால் சான்றிதழ் செயல்முறையின் சிக்கலானது
  • சான்றிதழ் தணிக்கைக்கு குறைந்தபட்ச நேரம் தேவை
  • தணிக்கைகளின் எண்ணிக்கை
  • தணிக்கை செய்யும் இடங்களின் எண்ணிக்கை: தயாரிப்பு வளாகங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள்
  • செயல்பாட்டு அளவு
  • சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான சந்தை அணுகல்: உள்நாட்டு மற்றும் / அல்லது ஏற்றுமதி

ஒரு நிறுவனம் உததேசக்  கடிதத்தின் ஒன்று மூலம் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்ப கோரிக்கையின் அடிப்படையில் HAC  ஹலால் சான்றிதழைப் பெற விரும்பினால், மேற்கூறிய அளவுகோல்களைக் கருத்தில் கொண்டு ஒரு செலவு அறிக்கை வழங்கப்படும்.

 

HAC சான்றிதழ் கட்டண கட்டமைப்பு