HAC பற்றி
HAC கோட்பாடுகள்
செயல்பாட்டின் முக்கிய கட்டுப்பாடு மற்றும் செயல்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தும் வழிகாட்டுதல்களை உருவாக்குவது கோட்பாடுகள் எனப்படும். அதன்படி, HAC வசம் பல அடிப்படைக் கொள்கைகள் உள்ளன. மேலும் அவை இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன. அது மட்டுமின்றி அவை வார்த்தைக ளால் மட்டுமல்லாமல் சாராம்சத்தாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கோட்பாடுகளில் உள்ள கொள்கைகள் HAC அமைப்பின் உயர்ந்த மட்டத்தில் எடுக்கப்பட்ட மூலோபாய முடிவுகளை நிர்வகிக்கின்றன. பல்வேறு நிலையான இயக்க நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முழுமையாக சீரமைக்கவூம் கொள்கைகள் துணை புறிகின்றன
HAC மூலம் நிறுவப்பட்ட கொள்கைகள் அதன் நடவடிக்கைகளின் நம்பகமான ஒரு அளவூகோளாக இருக்கின்றன, மேலும் அவை செயல்படுத்தப்படுவதற்கு பொறுப்பானவர்களுக்கு பொறுப்புக்கூறலை எளிதாக்குகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, HAC பின்பற்றும் கொள்கைகள் இத்துறையில் சிறந்த நடைமுறைகள் மற்றும் தரங்களை உறுதி செய்கின்றன. மேலும் அவை மற்றும் இணக்கத்திற்காக அதன் பங்குதாரர்களிடையே ஒரு பிணைப்பையூம் உருவாக்குகின்றன.
HAC இன் அடிப்படைக் கொள்கைகள் சுருக்கமாக கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
தரம் தொடர்பான கோட்பாடுகள்
"ஹலால் தரங்களின் தரத்தில் தொடர்ச்சியான முன்னேற்றம், வழிகாட்டுதல்கள், சட்ட பரிந்துரைகள் மற்றும் ஹலால் இணக்க சான்றிதழ் சேவைகள் உள்ளிட்ட பிற தொடர்புடைய தேவைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம் வாடிக்கையாளர் திருப்தியை பூர்த்தி செய்ய HAC உறுதிபூண்டுள்ளது."
தரம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான HAC இன் அர்ப்பணிப்பு அதன் அனைத்து ஊழியர்களின் செயலில் பங்கேற்பு மற்றும் ஈடுபாட்டின் மூலம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றது.
பக்கசார்பின்மை தொடர்பான கோட்பாடுகள்
அனைத்து பங்குதாரர்களின் முழு நம்பிக்கையையும் வென்றெடுக்க வேண்டிய ஹலால் சான்றிதழ் அமைப்பாக இருக்க அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் பக்கச்சார்பற்ற தன்மையின் அவசியத்தை HAC நன்கு புரிந்துள்ளது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் நன்கு அறிவோம், குறிப்பாக HAC சான்றிதழ்கள் மற்றும் ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்து பவர்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் நன்கறிவோம். .
ஹலால் சான்றிதழ் தொடர்பான பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளைச் மேற்கொள்வதில் பக்கச்சார்பற்ற தன்மையின் முக்கியத்துவத்தையும், பக்கச்சார்பற்ற தன்மையையும் அதன் அச்சுறுத்தல்களையும் தவிர்ப்பதற்கான முக்கியத்துவத்தையும், சாத்தியமான பொறுப்பு மோதல்கள், சார்பு மற்றும் நியாயமற்ற சிகிச்சையையும் HAC இயக்குநர்கள் குழு நன்கு அறிந்துள்ளது.
இந்த நடைமுறையை செயல்படுத்துவதன் மூலம், HAC அதன் அனைத்து நடவடிக்கைகளிலும் பக்கச்சார்பற்ற தன்மையை பராமரிப்பதற்கான தன் உறுதிப்பாட்டை நிரூபிக்கும்.
தகவல்களின் இரகசியம் பேணல் தொடர்பான கோட்பாடு
HAC தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமையையும் அதன் சொந்த தகவல்களையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது மற்றும் அந்த தகவலை மதிப்புமிக்க வணிகச் சொத்தாக கருதுகின்றது. எனவே, இந்த தகவல் அல்லது தகவல் அமைப்பின் திருட்டு, இழப்பு, தவறான பயன்பாடு, சேதம் அல்லது துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் குறைக்க HAC காத்திரமான மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கும்.
HAC இன் தகவல் பாதுகாப்பின் முதன்மை நோக்கம் பின்வருமாறு
- தகவலின் இரகசியத்தன்மை - தகவல்களைப் பெற அங்கீகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே முக்கிய HAC தகவல்களை அணுக முடியும்.
- தகவலின் நம்பகத்தன்மை - தகவல்கள் துல்லியமாகவூம் மிகச்சரியாகவூம் எதையூம் விட்டு விடாமலும் இருக்கும்.
- அணுகல் - அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகள் தேவைப்படும்போது முக்கியமான வணிகத் தகவல்களை அணுகலாம்.
- மேலே உள்ள தகவல் பாதுகாப்பு இலக்கை அடைய, ஒரு தகவல் பாதுகாப்பு நிர்வாக அமைப்பு (ISMS) ISO/IEC 27001: 2013 உடன் இணைந்து நிறுவப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. தகவல்களை மீறியதாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை உடனடியாக தகவல் பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.