பிரதான பக்கம் > ஹலால் சான்றிதழ்
ஹலால் சான்றிதழ்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
- ஹலால் மற்றும் ஹலால் சான்றிதழ் வித்தியாசம் என்ன?
ஹலால் என்பதன் பொருள் அனுமதி, அனுமதிக்கப்பட்ட அல்லது சட்டபூர்வமானதாது என்பனவாகும். இது ஒரு முஸ்லீமின் அனைத்து நடவடிக்கைகளுடனும் தொரடபுடையதாகும். உணவு மற்றும் பான உற்பத்தித் துறையில் ஹலால் சான்றிதழ் என்பது ஒரு தயாரிப்பு ஹலால் வழிகாட்டுதல்களுடன் இணங்குகிறது என்பதை உறுதி செய்யூம் ஒரு உறுதிமொழியாகும். - முஸ்லிம்கள் ஹலால் சான்றிதழ் பெறாத உணவை உண்ண முடியுமா?
முடியும், ஒரு உணவூ ஹலால் என திட்டவட்டமாக அறிந்தால் அதை அவர்கள் அதை உட்கொள்ளலாம். இருப்பினும், ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்பு ஒரு முஸ்லீம் நுகர்வோருக்கு எப்போதும் அதிக உத்தரவாதத்தை அளிக்கின்றது - ஹலால் கோட்பாடுஎன்றால் என்ன? மற்றும் ஒரு உணவூ ஹலால் ஆவதற்கான தகுதிகள் யாவை?
பின்வரும் வகைகளைச் சேர்ந்தவற்றைத் தவிர ஏனைய அனைத்தும் ஹலால் ஆகும்:- இஸ்லாமிய வழிகாட்டல் பிறகாரம் அறுக்கப்படாத ஹலாலான பிரானிகள் மற்றும் இறந்த பிரானிகள்
- நச்சுத் தனைமையூள்ள ஜந்துக்கள் மற்றும் உடலாரோக்கியத்திற்கு தீங்கான பொருட்கள்
- இரத்தம் மற்றும் அது தொர்புடைய அனைத்தும்
- பன்றி மாமிசம் உட்பட அது தொர்புடைய அனைத்தும்
- இரையை வேட்டையாடும் பறவைகள்
- மதுபானம்
- ஊர்வன, எலிகள் மற்றும் வண்டுகள்
- மனித உடலின் பகுதிகள்
- முஸ்லிம் அல்லாதவர்கள் ஏன் ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவை உண்ண வேண்டும்?
ஒரு முஸ்லிம் அல்லாதவருக்கு ஹலால் உணவை மறுக்க உரிமை உண்டு. இருப்பினும், ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் ஒரு நபருக்கு மேலே Q3 இல் குறிப்பிடப்பட்டுள்ள தீங்கான மற்றும் அறுவருப்பான உள்ளீடுகள் இருக்காது என்ற உத்தரவாதம் கிடைக்கின்றது. - SLS அல்லது ISO நிறுவனங்களுக்கு ஏன் ஹலால் சான்றிதழை வழங்க முடியாது? இந்த விடயங்கள் SLS அல்லது ISO அடிப்படையிலான சான்றிதழ்களில் உட்படாதா ?
SLS மற்றும் IOS தரங்களின் அடிப்படையில் ஹலால் சான்றிதழின் சில அம்சங்கள் பிற சான்றிதழ்களால் கண்காணிக்கப்படுகின்றன. இருப்பினும், தற்போது ஹலால் சான்றிதழுக்கான தரத்தை SLS அமைப்பு நிர்ணயிக்கவில்லை. - ஹலால் சான்றிதழ் நல்ல தயாரிப்பு நடைமுறைகள் (GMP), தீங்கு பகுப்பாய்வு மற்றும் சிக்கலான கட்டுப்பாட்டு புள்ளிகள் (HACCP) மற்றும் சுகாதாரம் தொடர்பான பிற ஒழுங்குமுறை சட்டங்களிலிருந்து எவ்வாறு ஒத்திருக்கின்றது அல்லது வேறுபடுகின்றது?
GMP என்பது தொழில்துறையிலிருந்து தொழிலுக்கு மாறுபடும் சிறந்த தயாரிப்பு நடைமுறைகளின் கலவையாகும். HACCP என்பது உணவுப் பாதுகாப்பிற்கான ஒரு அணுகுமுறையாகும், இது உற்பத்தி செயல்பாட்டில் உயிரியல், வேதியியல் மற்றும் உடல் ரீதியான இடையூறுகளைத் தடுக்கிறது. ஆனால் ஹலால் சான்றிதழ் மேலே உள்ள தரங்களுக்கு ஒத்ததாக இருக்கும் அதே வேளை இது நிச்சயமாக தனித்துவமானது. - இலங்கையில்HAC அமைப்பில் இருந்து ஹலால் சான்றிதழ் பெறும் முஸ்லிம் அல்லாத நிறுவனங்களின் சதவீதம் என்ன
அன்னளவாக 80% ஆகும் - ஹலால் போன்ற இஸ்லாமிய அடிப்படையிலான ஒரு சான்றிதழுக்கு முஸ்லிம் சமூகம் பணம் செலுத்த வேண்டுமா?
நிச்சயம் கிடையாது. முஸ்லிம் சமூகம் இதை ஒரு மதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதுடன் ஹலால் சான்றிதழைப் பெறும் நிறுவனங்கள் இதை ஒரு விவேகமான வியாபார நடவடிக்கை என்ற அடிப்படையிலேயே அதை பெறுகின்றனர். - ஹலால் விடயம் ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாக ஆகியூள்ள நிலையிலும் , பல உணவு மற்றும் பான நிறுவனங்கள் ஏன் அதிலிருந்து விலகிச் செல்லவில்லையே இது ஏன்?
ஹலால் சான்றிதழைப் பெறுவது வியாபாரக் கண்ணோட்டத்தில் இலாபகரமானது என்பதாலேயே பல நிறுவனங்கள் தொடர்ந்தும் அதை பெறுகின்றன. - ஹலால் சான்றிதழ் முஸ்லிம் அல்லாத நிறுவனங்களுக்கு எவ்வாறு தாக்கம் செலுத்தி வருகின்றது?
ஹலால் நுகர்வோரையும் ஈர்க்க அவர்களுக்கு இது துணை புறிகின்றது - *இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்களின் சதவீதம் என்ன?
ஏறக்குறைய 65% ஹலால் சான்றிதழ் பெற்றே ஏற்றுமதி செய்யப்படுகிறது - ஹலால் சான்றிதழ் இல்லாதிருப்பின் இலங்கை உணவூ ஏற்றுமதியின் நிலை எவ்வாறிருக்கும்?
ஹலால் உணவை கோரும் வெளிநாட்டு இறக்குமதி நிறுவனங்களுடன் வர்த்தகம் புறிய எண்ணும் இலங்கை நிறுவனங்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் ஹலால் சான்றிதழை முஸ்லிம் நாடுகள் மட்டும் கோருவதில்லை. உல்லாசத் துறையை அபிவிருத்தி செய்ய எண்ணும் ஜப்பான், கொரியா, தாய்லாந்து போன்ற பௌத்த நாட்டு நிறுவனங்களும் தற்காலத்தில் ஹலால் சான்றிதழை வலியூறுத்துகின்றன. - ஹலால் சான்றிதழ் முறைமை உள்ள முஸ்லிம் அல்லாத நாடுகள் யாவை?
ஹலால் சான்றிதழ் அமைப்புகளைக் கொண்ட 52 முஸ்லிம் அல்லாத நாடுகளுடன் HAC செயல்படுகின்றது. தாய்லாந்து, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், பிரேசில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் அவற்றில் சிலவாகும். - ஹலால் சான்றிதழை சுங்க வரியல்லாத ஒரு தடையாக கருத முடியூமா?
சுங்க வரி விதிப்பு அல்லாத விதங்களில் வர்த்தகங்களுக்கு தடை விதிப்பதையே இது குறிக்கின்றனது. ஆம் அந்த வகையில் ஹலால் சான்றிதழை சுங்க வரியல்லாத ஒரு தடையாக வரைவிளக்கணம் செய்ய முடியூம். - சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் மோதலை தூண்டுவதற்கு ஹலால் விஷயத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றார்களா?
ஆம், இனங்கள் இடையே பிரச்சினையை தூண்டுவதற்கும் நாட்டில் அமைதியின்மையை உருவாக்குவதற்கும் ஹலால் விடயம் பயன்படுத்தப்படுவது ஒரு கசப்பான உண்மையே. - ஹலால் சான்றிதழ் பெறுவதற்கான கட்டண அமைப்பு என்ன?
கட்டணக் கட்டமைப்பானது நியாயமான கட்டணக் கணக்கீட்டு முறையை நிர்ணயிப்பதற்கு பங்களிக்கும் பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதது. HAC இந்த விவரங்கள் தற்போது தனது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது , இந்த இணைப்பு வழியாக HAC இணையதளத்திற்கு உட்பிரவேசிக்கலாம் link Certification Fee - கட்டணமாக ஈற்றப் படும் வருவாய் எதற்கெல்லாம் செலவூ செய்யப்படுகின்றது?
உணவுத்துறைசார் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட முழு நேர ஊழியர்களை HAC கொண்டுள்ளது. HAC என்பது ISO 9001 மற்றும் ISO 27001 ஆகியவற்றால் சான்றளிக்கப்பட்ட சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஹலால் சான்றிதழ் வழங்கும் அமைப்பாகும். அது தவிர வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் அங்கீகார மையத்தின் (GAC) அங்கீகாரத்தையூம் HAC பெற்றுள்ளது. அனைத்து வருமானங்களும் ஹலால் சான்றிதழ் செயல்முறையை மேம்படுத்தவூம் தொடர்ந்து மேற்கொண்டு வரவூமே பயன்படுத்தப்படுகின்றது. கொள்கை ரீதியாக, இந்த அமைப்பு 2014 ஜனவரியில் நிறுவனப்பட்டது முதல் எந்தவிதமான நன்கொடைகளை பெறவோ வழங்கவோ இல்லை. நிதி தணிக்கை மூலம் இது மேலும் ஊர்ஜிதமாகின்றது. - HAC பணிப்பாளர்கள் மற்றும் நிறுவிய அங்கத்தவர்களுக்கு ஏதேனும் கொடுப்பனவூகள் வழங்கப்படுகின்றதா
2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் HAC ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், இயக்குநர்கள் மற்றும் அதன் நிறுவன உறுப்பினர்கள் முழுநேர ஊழியர்களாக இல்லாவிட்டால் அவர்களில் எவருக்கும் எவ்வித கொடுப்பனவூகளையூம் வழங்க அனுமதி கிடையாது. - HAC நிறுவனத்துடன் அகில இலங்கை ஜமியதுல் உலமா அமைப்பின் (ACJU) தொடர்பு எவ்வாறானது
உணவூ மற்றும் பானங்கள் தொடர்பான மார்க்கத் தீர்வூகளை கேட்டறிவதோடு ஜமியதுல் உலமாவூடன் உள்ள உறவூ முற்றுப் பெறுகின்றது - கிழப்பப்பட்டுள்ள சில பிரச்சினைகளுக்கு தீர்வூகளைக காண அரசியல்வாதிகளோ கொள்கை வகுப்பவர்களோ ஏன் நடவடிக்கை எடுப்பதில்லையே அது ஏன்?
கவனம் செலுத்த வேண்டியவர்கள் வேண்டுமென்றே அக்கறையின்றி இருப்பதாக வே HAC நம்புகின்றது. சாதகமாக வைத்து, சில அரசியல்வாதிகள் தங்கள் சுயநல அரசியல் நோக்கங்களை அடைய ஹலால் விடயத்தைப் தவறாக பயன் படுத்த முற்படுகிறார்கள்.